Posts

Showing posts from March, 2025
கவிஞர் ஜெ.ரோஸ்லின் கவிதைகள் 1 இந்தத் தேநீர் குவளையை நீங்கள் பார்த்திருக்ககூடும் உடைந்த காதலின் சில்லுகளை பசையால் ஒட்டியபிறகு உண்டானது ஒரு விநோதமான தேநீர் குவளை. பிறகு பயன்பாட்டிலிருந்து விலக்கிவைக்கப்பட்டு மெதுமெதுவாக மெளனத்தின் இருட்டுக்குள் மூழ்கியது ஒரு நகரம் கடலுக்கடியில் மறைவது போல. காலப்போக்கில் இதயத்தின் சமையலறையிலிருந்து விரிசலின் கண்களால் நம்மைப் பார்க்க கற்றுக்கொண்டது ஆனால் நாம் ஒவ்வொருவரும் இன்னமும் பூமியில் வாழ்ந்துகொண்டிருப்பதாக தன்னைத்தானே நம்பவைத்துக்கொள்ளும் ஒரு வேலையில் இரவுபகலாக உழைத்துக்கொண்டிருந்தோம். 2 என் இனிய தேய்வழக்கே அது ஒரு மழைநாள். குடைக்குள் நின்றுகொண்டிருந்தேன். எங்கிருந்தோ ஒரு வண்ணத்துப்பூச்சி வந்தது. குடையில் என்னுடன் ஒரிரு நொடிகள் நின்று பின்பு பறந்து சென்றது. என் இனிய தேய்வழக்கே இந்த மழையில் மட்டுமல்ல காலத்தின் கூர் மழையிலும் நனையாதிருக்கும் இடமெல்லாம் கூட உனக்குத் தெரியும் போலிருக்கிறதே? இரு, என்னையும் அழைத்துச்செல்லேன். நானும் உன்னுடனேயே வந்துவிடுகிறேனே? 3 நீல வெளிச்சம் மாலைப்பொழுதில் அறையை ஒழுங்கு செய்த களைப்பில் இன்று அவளது கணவனும் கூட சீக்க...

கவிதை ரசனை முகாம் 2025

அமர்வுகள்: 1. அணங்கன் - தசரதனின் முதுமை -  இணைப்பு புதிய கவிஞர்களின் பட்டியல்: 1. சம்யுக்தா மாயா  கவிதைகள் -  இணைப்பு 2.  கவிஞர் நெகிழன் கவிதைகள் -  இணைப்பு 3. கவிஞர் பெரு.விஷ்ணுகுமார் கவிதைகள் -  இணைப்பு 4. கவிஞர் சோ.விஜயகுமார் கவிதைகள் -  இணைப்பு 5. கவிஞர் சஹானா கவிதைகள் -  இணைப்பு 6. கவிஞர்  ஜெ.ரோஸ்லின் கவிதைகள் - இணைப்பு
 கவிஞர் சஹானாவின் கவிதைகள் 1 மனதின் அகத்துள் ஆழ்கடலை பள்ளத்தாக்குகளை பாதாளங்களை மண்ணறைகளை இடுமுடுக்குகளை முட்டுச்சந்துகளை சுடுகாடுகளை பாம்பு புற்றுகளை சிலந்தி வலைகளை கண்ணீர் குளங்களை வெந்நீர் ஊற்றுகளை மகிழ்ச்சி குமிழ்களை பரந்த வெளியினை பால் வீதியினை வேற்று கிரகத்தினை அகம் கொண்ட இப்பிரபஞ்சத்தின் சிறு மனமே. 2 அலைக்கு மேல் துள்ளும் மீனைப்போல நீர்க்காகம் குளித்தலும் பறத்தலுமாக இருக்கிறது விரிந்த முழுக்குளத்தின் குறுக்குவெட்டாக நொடிப்பொழுதில் பறந்து செல்கையில் எல்லைப் பரப்புகள் மாயமாவதை ஓர் ஓரத்தில் மரமாய் நின்று பார்த்துக் கொண்டு இருக்கிறேன் இலைகள் துளிர்க்கின்றன. 3 ஏ பழுதடைந்த கடிகாரமே பழுதான நேரத்தை ஏன் சொல்லிக்கொண்டே இருக்கிறாய் போரடிக்காதா
 கவிஞர் சோ.விஜயகுமார் கவிதை பிளக் பிடுங்கப்பட்ட ரோபோபோல வலிப்பு வரும்போதெல்லாம் கீழே வீழ்வாள் அம்மா. அம்மாவின் நிழல் என்றாவது விழவேண்டும் மெத்தைகளால் ஆன நிலத்தின்மீது அம்மாவிற்குப் பிடிவாதம் அதிகம் செல்லக் கோபங்கள் அதிகம் குழந்தையைப் போலவே அடம்பிடிப்பாள் குழந்தையைப் போலவே அடிப்பாள் சப்தமாக வாயில் கோரையொழுக அழுவாள் அவள் உடலில் ஒரு புறம் அவளது பால்யத்தை விட்டு வெளிவரவில்லை அவளது மூளையிலும் இயல்பான கண்களுக்கு சற்றே மாறுகண் இயல்பான கைகளுக்குக் கொஞ்சம் எட்ட முடியாத உயரத்தில் அம்மாவின் ஒரு கை இயல்பான கால்களுக்குக் கொஞ்சம் எட்ட முடியாத தூரத்தில் ஒரு கால் இயல்பான மூளைக்கு நிகராக வளராத பிடிவாதம் அவளின் மூளை அம்மா அவளது இடதுபுறத்தால் கைவிடப்பட்டாள் தன் வலது புறத்தால் வளர்ந்து வந்தாள் சூம்பிய வயிறு பலூன்போல் வீங்கியபோது யாருக்குமே நம்பிக்கையில்லை நான் இறந்து பிறப்பேன் அல்லது பிறந்தவுடன் இறப்பேனென அனைவரும் நினைத்தார்கள். நான் பிறக்கும்போது தான் இறந்துவிடுவோமோ என அம்மா பயந்தாள். நான் பிறந்தேன் அவள் கருப்பையின் இடதுபுறத்திலிருந்து அம்மா பிறந்தது முதலே பாவாடை சட்டைதான் திருமணமானது முதல் நைட்டிதான...
 கவிஞர் பெரு.விஷ்ணுகுமாரின் கவிதைகள் 1 எடிசன் புன்னகைக்கிறார் நள்ளென் யாமத்தில் உறக்கம்கலைந்து தட்டுத்தடுமாறி சுவரில் கைவைத்துத் தடவியபடி அறையின் விளக்கை எரியவைக்க முயற்சிப்பவனிடம் அந்தரத்தில் தொங்கும் ஒளிக்கூடையானது அந்த நேரத்தில்போய் சரி தவறு என்றெல்லாம் கணக்கு பார்ப்பதில்லை இதுபோலான இக்கட்டான சூழ்நிலையிலெல்லாம் போனால் போகட்டுமென தவறான சுவிட்ச்சுக்கும் ஒளிர்ந்துவிடும் அதுதான் தாட்சண்யம் மிக்கதோர் விளக்கு 2 மே-சொல்லிகள் பாதையை மறித்தபடி மந்தமாகச் செல்லும் மே-சொல்லிகள் தாமாகவே விலகி வழிவிடட்டும் எனக் காத்திருந்தேன். அதற்குள் அவை என்னையும் தங்களில் ஒருவராக நினைத்துக்கொண்டன போலும். சரிதான்…. எல்லாவற்றுக்கும் மே-சொல்வதென்பது எளிமையானது மட்டுமல்ல சௌகரியமானதும்கூட எல்லா பொதிகளையும் ஒரே வண்டியில் ஏற்றலாம். எல்லா பூக்களுக்கும் ஒரே வண்ணமிடலாம் யாராவது வந்து மீட்டெடுக்கும்வரை வழிமொழியப் பழகாதொரு பள்ளத்தாக்கினை செப்பனிட்டுக் கொண்டிருக்கலாம். இப்போது மொத்த கூட்டமும் வலப்புறம் திரும்புகிறது எதையும் கண்டுகொள்ளாமல் நிற்கும் நான் அங்கிருந்து நழுவி நேராகச் செல்கிறேன் எந்தவித சலனமுமில்லை மேய்ப்பனிட...
 கவிஞர் நெகிழனின் கவிதைகள் (மூன்று சப்பாத்துகளின் கதை தொகுப்பிலிருந்து) 1 யாரும் ஏந்தாத சில விரல்கள் ஒருநாள் மலைக்கு தலையும் கைகால்களும் முளைத்தன ஒரு கணம் அது எழுந்து நின்று கால் மடிய தன் காலடியில் வளர்ந்த ஒரு சிறிய செடியின் முன் மண்டியிட்டது. ஒவ்வொரு கையிலும் பூக்களை விரல்களாகப் பெற்ற அச்சின்னஞ் சிறிய செடி மலையின் முகத்தை ஆசையோடு வருடிவிட்டது அப்போது உண்டான சிலிர்ப்பில் அதுவரை யாருமே ஏந்தாத சில விரல்கள் உதிர்ந்தன. 2 சால்னாவின் வாசம் மணி பத்து எல்லோரும் தூங்கிவிட்டார்கள் ஒன்பது வரை சிமினி விளக்கை ஒளிரவிடும் முனியம்மாள் கிழவி மதியமே மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள் திருட்டுக் கால்களால் மெது மெதுவாய் நடந்துவந்து கதவைத் தட்டியது புரோட்டாவின் சால்னா வாசம் அது உலகின் மிக மெல்லிய ஒலி.  3 அதிசய மரம் சாக்கடையோரம் கிடந்தவனை தூக்கிச் சென்று மரத்தடியில் கிடத்துகிறான் தூரத்தில் நின்றுகொண்டு போவோரிடமும் வருவோரிடமும் சொல்கிறான் அங்கே பாருங்கள் அந்த அதிசய மரம் தனக்குக் கீழே நிறைய இலைகளையும் ஒரு மனிதனையும் உதிர்த்திருக்கிறது. 4 என்றாகிவிட்டது சற்றே குரலவிழ்த்து தேநீரில் சக்கரையில்லை என்றேன் க...